ரோசி உனை பாவத்தில் இருந்து மீட்பேன்

வியாழன், 12 நவம்பர், 2009
(நாய்களால் துரத்தப்பட்டு காணாமல் போன எனது செல்லப்பூனையை பிரிந்த வேதனையில் எழுதிய கவிதை)

ரோசி உனை பாவத்தில் இருந்து மீட்பேன்
உனை நான்
கொடிய பாவத்தில் இருந்து
மீட்டுச் செல்வேன்
ஒரு கர்த்தராக இல்லாமல்
காதலனாக………. நண்பனாக……….

வாயில் திண்ணையில்
பசித்த வேட்டை நாய்போல
வீணீர் வடித்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு
ஒன்றா இரண்டோ துண்டு இறைச்சிகளை
வீசிவிட்டு உன்னை அழைத்துச் செல்வேன்
என்னுயிரை காவல் வைத்து

இப்போதும்என் மனதில்
ஊள்ளாந்த தளங்களைத் தொட்டு
விரிந்த படியே செல்கிறதே உன் நினைவு
மௌனத்தின் அச்சத்தை எவ்வாறு உடைப்பேன்?
புன்னகையையோ? அல்லது ஒரு
புல்லாங்குழல் இசையையோ கொண்டு
உடைத்து விட்டுப் போவேன் என்றால்
நீ சேதப்பட்டுவிடக் கூடாது.

ரோசி!
நீ பயப்படாதே! – உனது
விழிகளில் வழியக்கூடாது கண்ணீர்!
புல்லும் பூவரசம் பூவும்
ஓடித்து நான் தருவேன் - உன்
பஞ்சுமேனியை இருத்தி உறக்கம் போட
வெண்பருத்தி உடைத்து மெத்தைகள் சமைப்பேன்
ரோசி நீ பயப்படாதே! – உன்னோடிருந்து
காதலனாக…… நண்பனான……
நான் உனைக் காப்பேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக