சித்திரையே சிங்காரி

வியாழன், 12 நவம்பர், 2009


சித்திரையே சிங்காரி – சின்னச்
சிரிப்புடனே அள்ளும்மன மகமாரி
இத்தரையில் மாந்தர்கள் துயரால்
செத்த கதை தெரியலையோ
புத்திக்காரியென புழகாங்கித மடைந்தோம்
புத்தனுக்கும் சொந்தக்காரி யென்றறிந்தோம்
சத்தியமாய் சொல்கிறோம் சகவாசம்
உன்னுடன் வேண்டாம் !
சித்திரையில் நீ வருவதால் - எங்கள்
சீற்றம் குறைய சமாதானம் கொண்டுவா?
பத்தரை மாதத் தங்கமே - இல்லையென்றால்
ஈழத் தமிழனோடு இனிதுற - இல்
அறத்தில் ஊடலோடு கூடல் கொண்டு
புத்திரியைப் பெற்றுத்தா ?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக