
விழிகள் வீர வரலாறு எழுதட்டும்.
பேசமறந்த பொருளல்ல நீ
தேச வரைபடத்தில்
வீர விழுதெறிந்து நிற்கும்
தல விருட்சம்.
செங்குருதியின் நிறமெடுத்து
வரலாறு எழுதிய
போர்க்கால சித்திரமாய்
நீயிருக்க…..
வர்க்க வேறுபாடுகளும்
சமுதாய சம்பிரதாயங்களும்
முள்ளாய் உந்தன்
முலைகளை கிழித்தெறிய - நீ
சீரழிந்து போவதேன் ?
நிலவும் , மலரும், பதுமையும்
உனக்கென உவமையாய்க்; கூறும்
ஆசை மொழியல்ல.
அடுப்படியும்
மந்திரக் கட்டிலும்
உனது சொர்க்கமல்ல.
இது
உனக்கு விலங்கிடுவதற்கான
சூழ்ச்சி அரசியல்!
தோழியே !
கற்பென்னும் ஆயுதம் தரி
தெருவில் நீ துணிந்து நட
உல்லாசமாய் பறந்து திரி
வானத்தைப் பார் -இந்த
வையகத்தைப் பார்
அறிவியல் ப+ர்வமாய்
வேற்றுக் கிரகத்தைப் பார் – ஆனால்
உல்லாச புரியாய் இருந்து விடாதே !
உனக்கான சமுதாய விலங்குகள்
உடையும் வரை
விடியலின் வெளிச்சத்தை – நீ
தரிசிக்கும் வரை
உனது பாதச் சலங்கைகள்
வீர நர்த்தனமிடட்டும்
விழிகள் வரலாறு எழுதட்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக