
வலியோடு வா
தூரம் அதிகமில்லை
கூப்பிடு தூரம் வரையில் தான்
இலக்கு.
நெஞ்சிலே வலி……..
எட்டி நடக்கும் பாதங்களிலும் வலி………….
கண்களிலே தூக்கம்…….
கைகளிலே சோர்வு…………………
இன்னும் சொற்ப தூரம் தான்
வலியோடு விரைந்து வா…..!
தாயின் கருப்பையின் வலி
மழலையின் பிறப்புக்குத்தான்
வித்தின் வெடிப்பு
நாற்றின் வளர்ச்சிக்குத்தான்
ஏழiயின் உழைப்பிலே வலி
ஒரு வேளை கஞ்சிக்குத்தான்
குயிலின் குரலில் வலி
விடியலின் செய்திக்காகத்தான்
செடியின் மொட்டிலே வலி
பூவொன்றின் மலர்வுக்குத்தான்
இடி, மின்னலால்
மோதும் முகிலுக்கு வலி
மண்ணில் மழைக்குத்தான்
தோழனே!
வலி என்பது உனக்கு மட்டுமல்ல
இயற்கைக்கும் வலிகள் உண்டு.
பூமியும் இதைத் தாங்குகிறது.
வலிகளைத் தாங்குபவனுக்கே
இந்த வையகம் சொந்தம்.
இன்னும் இன்னும்
சிந்தனைகளோடு அடைகாக்காதே
சிந்தனை உணர்வுகளுக்கு உருக்கொடு!
வலிகளைத் தாங்கி வா
வாசல் திறந்து வானத்தில் ஏறலாம்.
தூரம் அதிகமில்லை
கூப்பிடு தூரம் வரையில் தான்
இலக்கு.
நெஞ்சிலே வலி……..
எட்டி நடக்கும் பாதங்களிலும் வலி………….
கண்களிலே தூக்கம்…….
கைகளிலே சோர்வு…………………
இன்னும் சொற்ப தூரம் தான்
வலியோடு விரைந்து வா…..!
தாயின் கருப்பையின் வலி
மழலையின் பிறப்புக்குத்தான்
வித்தின் வெடிப்பு
நாற்றின் வளர்ச்சிக்குத்தான்
ஏழiயின் உழைப்பிலே வலி
ஒரு வேளை கஞ்சிக்குத்தான்
குயிலின் குரலில் வலி
விடியலின் செய்திக்காகத்தான்
செடியின் மொட்டிலே வலி
பூவொன்றின் மலர்வுக்குத்தான்
இடி, மின்னலால்
மோதும் முகிலுக்கு வலி
மண்ணில் மழைக்குத்தான்
தோழனே!
வலி என்பது உனக்கு மட்டுமல்ல
இயற்கைக்கும் வலிகள் உண்டு.
பூமியும் இதைத் தாங்குகிறது.
வலிகளைத் தாங்குபவனுக்கே
இந்த வையகம் சொந்தம்.
இன்னும் இன்னும்
சிந்தனைகளோடு அடைகாக்காதே
சிந்தனை உணர்வுகளுக்கு உருக்கொடு!
வலிகளைத் தாங்கி வா
வாசல் திறந்து வானத்தில் ஏறலாம்.
நன்றி : உதயன் சூரியகாந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக