
பூமி செத்துவிடப் போகிறது…..
மனிதனை விட்டுவிட்டு
பூமி செத்துவிடப் போகிறது
மனித வாழ்க்கையின்
இறுதி நகர்வுகளை - இறைவன்
கடைசி நிகழ்காலத்தின் நிமிடங்களிலேயே
கையளிக்கிறான்
மனிதனோ திக்குமுக்காடி
இன்னும் கொஞ்ச நாள்
தாவென்று கெஞ்சுகிறான்
துப்பாக்கியால்
இருளுக்கு வெளிச்சம் போட பலர்.
சூரியனோ சீக்கிரத்தில்
மறைந்து போக துடிக்கிறான்
இன்னொரு
கிரகத்தை நோக்கி
நகருங்கள் என்று விஞ்ஞானம்
வழிகாட்டுகிறது – கையில்
அணுகுண்டை வைத்திருந்தபடி.
இயற்கைத் தாயின்
கண்கள் வெடித்து
குருதி பீறிடுகிறது
சுனாமியாய்……புயலாய்……
பூகம்பமாய்………………..
இன்னும் வௌ;வேறு வடிவங்களில்…..
கடவுள் - இப்போது
கண் பொத்தி காது பொத்தி
வாய் பொத்தி அழுகிறான்…
காற்றாய் கரைந்து காற்றிலே
கல்லறையாகிவிட நினைக்கிறான்;
பூமி; செத்துவிடப்போவது
அவனுக்கு மட்டும் தான் தெரியும்
பேதை மனிதனோ துப்பாக்கிக்கு
வைத்தியம் பார்க்கிறான்
பூமிக்கு கல்லறை கட்டுவதற்கு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக