மகவொன்றின் பிறப்பில்……..

வியாழன், 12 நவம்பர், 2009


மகவொன்றின் பிறப்பில்……..
சாம்பல் பூத்த மேட்டில்
விடிவெள்ளியின் பார்வை
பூத்திருக்கிறது
இரவிலும் பகலிலுமாக.

ஒரு சூரியனாய்
ஒளிகொள்ளப் போதாவிட்டாலும்
விரும்பி ஒளிசிந்தி நிற்கிறது.

மெழுகுவர்த்திகளின் ஆத்மாக்கள்
ஆயிரம் சூரியனாய் - இந்த
தேசத்தில் உதிக்கப்போகிறது
இனவாத இருட்டின் திரைகளை
சுட்டெரிப்பதற்காக.

பறவைகளெல்லாம்
தம்மை அழகுபடுத்தி - இப்போது
பூபாளமாய் புன்னகைக் குரலிடுகிறது.

மேகங்களெல்லாம் தொலைவிலுள்ள
உறவுகளுக்கு நல்லவல்ல
செய்தி சொல்ல
வரிசையாய் நகர்கிறது

கார்த்திகைப் பூக்களின்
மகரந்தப் பொடிகள்
இன்பக் கருக்கொள்ள
மழலைகளின் பேச்சுகள்
தேசிய கீதமாய் ஓலிக்கிறது

நாளைய முன் விநாடிகளில்
மகவொன்றின் பிறப்பில்
கார்த்திகைப் பெண்களின்
மகிழ்வைப் போல ஆடிப்பாட - தமிழ்
உறவுகள் ஆயிரம் ஆயிரம் லட்சங்களாய்
தொப்பூள் கொடி மூலத்துடன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக