உயிர் எரிந்து ஓலமிடும் குரல்…….

வியாழன், 12 நவம்பர், 2009


உயிர் எரிந்து ஓலமிடும் குரல்…….
ஆழிப்பேரலையே…………!
அடங்கி நீ போய்விட்டாய்
அலையாய் நீ கொண்டுவந்த துன்பம்
மலையாய் மனதை இடித்து நிற்கிறது…

நீள் அலைகொண்டு நீ
மொட்டுகளை
உருக்குலைத்துப் போட்டாய்
பூக்களை
கசக்கிப் பிழிந்தாய்
வேர்களை
அடியோடு பிடுங்கியெறிந்தாய்
காற்று வாக்கில்
பிணங்களை வீசினாய்……..

யுத்தம் சப்பிய
நடைபிணங்களாய் நாமிருக்க
மீண்டும் எங்கள்
முற்றத்தில்
இழவு வைத்துப் போனாய்
இன்னும் அந்த
ஓப்பாரி சுரமிழக்கவில்லை

எனதுயிர் எரிந்து
வானுயர ஓலமிடுகிறது
உறவுகளே!
ஆழிப்பேரலைகளால் காவுகொண்ட
ஆத்மாக்களே – எங்களுயிர்
உங்களுக்காய் அஞ்சலிக்கின்றது……….
சிரம் தாழ்த்தி
விழிகள் கசிகின்றது…….
விடியலின் விளக்கெடுத்து
ஒளியேற்றுகின்றோம் -உங்கள்
ஆத்மா சாந்தியடைய.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக