வானெழுந்து ஒளியேற்று !
வியாழன், 12 நவம்பர், 2009
வானெழுந்து ஒளியேற்று !
வருடம் ஒன்றாய் உனதொளி
வாசல் வந்து போகிறது.
நெருடல் ஏதும் இல்லாமல் - தேகம்
நெருப்பாய் நின்று எரிகிறது.
ஒரு நாளில் உன்நினைவும்
இனிவின்றி கழிகிறது - ஏதும்
தருவாய் என்று நினைத்திருந்தோம்
இன்னலை யெல்லவா தந்து போகிறாய்.
ஒரு வார்த்தையேனும் பேசுவாய் என்றால்
மௌனத்துடனேயே திரும்புகிறாய்.
இம்முறை ஏது கொணர்ந்தாய் எமக்கு?
காரிருள் விலக்கி – எங்கள்
காரியம் நிறைவேற,
இங்கு நீ தங்கிவிடு.
தமிழர் தேசமெங்கும் - இன்பம்
பொங்கிப் பிரவாகிக்க
தீப ஒளியே !
வானெழுந்து ஒளியேற்று!
Posts Relacionados:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக